ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அவரை அகற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, 14 நாட்களுக்கு அமுலுக்கு வரும் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொன்சேகாவை கட்சியிலிருந்து இருந்து நீக்குவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பொருளாளர் ஹர்ஷ டி சில்வா மற்றும் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.