இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாம்! – அமைச்சர் ஹரீனின் கருத்துக்கு எதிர்ப்பு

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நிகழ்வொன்றின்போதே அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தின் காரணமாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை மீறப்பட்டுள்ளது. எனவே, இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ரெப-40)

You May Also Like

About the Author: digital

Leave a Reply