மன்னாரில் புதிய காற்றாலை திட்டம்!

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை அடுத்து இந்த திட்டம் வந்துள்ளது.

இதேவேளை புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கும்   அமைச்சகம் உத்தேசித்துள்ளது.

மேலும் நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply