மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 815ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட லங்காபுர மாவட்ட செயலக ஊழியர் ஒருவரின் உறவினர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை இரண்டாயிரத்து 391பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது, 413பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir