பிள்ளைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணைய வழி ஊடாக இலத்திரனியல் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வலையமைப்பை ஜா-எல கலால் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஈ -சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 10 கோடி ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஜா-எல கலால் அத்தியட்சகர் பிரமேஸ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

குறித்த ஈ – சிகரெட்டுக்களுக்கு இளைஞர் சமூகம் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வருவதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த, ஜா-எல கலால் அத்தியட்சகர் பிரமேஸ் பெர்னாண்டோ,

சிகரெட்டை விட இது அதிக போதை ஏற்படுத்தக்கூடியது இந்த ஈ-சிகரெட். இதனை புகைப்பதை உங்களால் கண்டுபிடிக்க கூட முடியாது. வெவ்வேறு வாசனைகள் இதிலிருந்து வெளியேறுகின்றன. இதுபோன்ற வாசனை உங்கள் பிள்ளைகளிடம் இருந்து வந்தால், தயவுசெய்து கண்டுபிடிக்கவும். இந்த ஈ-சிகரெட்டுகள் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் கையில் கட்டப்படும் ஸ்மார்ட் கடிகாரத்தின் வடிவிலும் இருக்கும். தெளிவாக அடையாளம் காண முடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply