நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்! !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது   உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர்  தனது  இராஜினாமா கடிதத்தை இன்று  நாடாளுமன்ற  பிரதிப் பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இதன்படி, பிரேமரத்ன ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply