புதிய பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக இன்று கடமையில் இணைகிறார்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

 மூத்த காவல்துறை தலைவரும் , பதில் பொலிஸ்மா அதிபருமான தென்னகோன் கடந்த திங்கட்கிழமை  புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது. 

உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தேசபந்து தென்னகோனிடம் வழங்கி வைத்தார்.

இதேவேளை தென்னகோன் 2023 நவம்பர் 29 அன்று பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply