முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (15) உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.
ஆனால், விசாரணை முடிவடைந்த போதிலும், உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிப்பதை ஒத்திவைத்தது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க மற்றும் பலர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.