தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அனுப்பப்படும் இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு குற்றவியல் பொறுப்பதிகாரி, நான்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இரண்டு சிறப்பு அதிரடிப்படை பணியாளர்கள் உட்பட ஒன்பது பணியாளர்களைக் கொண்டதாக இருக்கும் என்று காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.