ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (வயது 69) காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக நேற்று அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதன் முறையாக அவர், நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அவரின் மறைவையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட முன்னுரிமைப் பட்டியலில் எம்.ஜி.வீரசேன 38 ஆயிரத்து 241 விருப்பு வாக்குகளை பெற்று நந்தசேனவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.