இலங்கையில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் போக்குவரத்து அமைச்சு மற்றும் வீதி பாதுகாப்பு தேசியசபை இணைந்து நடத்திய சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் முச்சக்கர வண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் அதிவேக வீதிகளுக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களிலேயே அதிகளவானோர் மரணிக்கின்றனர். நாளாந்தம் 10 பேர் வரையில் உயிரிழக்கின்றனர். எனவே, விபத்துக்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.