முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெரும தனது 64 ஆவது வயதில் காலமானார்.
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையல் அவரது சடலம் களுத்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகரான தெவரப்பெரும் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இவர் மத்துகம பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும் (2002) மேல் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும் 2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது தனது தொகுதியின் கிராமப்புற மக்களுக்கு உணவு, உலர் உணவுகள் மற்றும் பிற தேவைகளை வழங்கி பாரிய சமூக சேவைகளையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.