நுவரெலியா – கோர்ட் லொட்ஜ் பெருந்தோட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம்(16) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சுமார் 3.2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆசியாவின் சிறந்த இரகசிய பாதையான பீக்கோ ட்ரெயல் பாதை வழியாக நடந்து சென்று,கோர்ட் லொட்ஜ் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பீக்கொ ட்ரெயல் என்பது இலங்கையின் மத்திய மலைநாடு வழியாக அமைந்துள்ள 300 கிலோ மீற்றர் கொண்ட மலையேற்ற பாதையாகும். இது ஆசியாவின் சிறந்த இரகசிய பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பாதை கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹட்டன் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா ஊடாக ஹப்புத்தளை மற்றும் எல்ல பகுதிகளை சென்றடைகிறது.
பிரித்தானிய காலனித்துவ காலத்தில் பெரிய தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொண்டு செல்ல இந்த பாதை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.