அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த வாரத்திற்குள் சாதாரண தர அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசாங்க பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் நேற்று (17) தபாலில் நுழைவுச் சீட்டுகள் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி பத்திரங்கள் இம்மாதம் 20ஆம் திகதி தபாலில் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஒன்லைன் மூலம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 22ஆம் திகதி ஒன்லைன் முறைமை திறக்கப்படும் எனவும், திருத்தங்களை சமர்ப்பிக்க 29ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரியும் அதன் பிரதியொன்றை பெற்றுக் கொள்ளலாம் எனவும் , பாடசாலை விண்ணப்பதாரிகள் அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பாடசாலை அதிபரின் கையொப்பத்தை பெற்று பரீட்சை பரீட்சை நிலையத்திற்கு அதனை கொண்டு செல்ல வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் விண்ணப்பதாரர்கள் ஒன்லைன் முறையில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட நகலை பிரதியெடுத்து அதனை அனுமதி அட்டையுடன் பரீட்சை நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.