ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், “நீதி கிடைக்கும் வரை விழித்திருப்போம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பேராயர் இல்லம் விசேட சமய நிகழ்ச்சிகளை 21ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், எதிர்வரும் 20 ஆம் திகதி ஊர்வலமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் கொழும்பு கொச்சிக்கடையில் தொடங்கி கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு நடைபெற்ற நேரத்தை நினைவுகூரும் வகையில், 21 ஆம் திகதி காலை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இறந்தவர்களுக்கான நினைவு கூரல் மணி அடிக்கப்படும் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் ஆலயங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.