சஜித் அணியினரை நேரில் சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் !

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்றுப் பிற்கபல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு ஒரு மணி நேரம் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் செல்வி. சன் ஹையன் இடையில் 45 நிமிட நேருக்கு நேர் பிரத்தியேக சந்திப்பும் இடம்பெற்றது.

பொருளாதாரம், வர்த்தக, அரசியல் உறவுகள் என பல துறைகள் குறித்து இங்கு விரிவாகக்  கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இங்கு, சீனாவின் பொருளாதார அபிவிருத்தி மாதிரியைக் கருத்தில்கொண்டு, எமது நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டு வரக்கூடிய முறை குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதன்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத் தலைவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் குழுவினரிடம் தெரிவித்ததுடன், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியைக் கட்டியெழுப்ப தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply