பொலிஸாரினால் தாக்கப்பட்டநபர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சீவல் தொழிலாளி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் தொழிலாளி மன்னர் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடம்பன் பள்ளி வாசல் பிட்டி , நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்டு வரும் நபரை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் , காட்டிறைச்சி விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வீதியில் வைத்து சோதனை இட்டுள்ளனர்.

அதன் போது அவரிடம் இருந்து இறைச்சி எதுவும் மீட்கப்படாத நிலையில் , அவரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் பனை உற்பத்தி பொருட்கள் மற்றும் கள் என்பவற்றை பொலிஸார் மீட்டு , அனுமதியின்றி கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க போவதாக கூறியுள்ளனர்.

அதனால் தொழிலாளிக்கும் பொலிஸாருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் , பொலிஸார் கை விலங்கினால் தொழிலாளியை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருடன் தர்க்கப்பட்டதால் , அவரை பொலிஸார் கைது செய்ய முயன்றவேளை அவர் நிலத்தில் விழுந்தமையால் , காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply