தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக ஏனைய தொழில் சேவைப் பிரிவுகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணையாக, தேசிய ஆசிரியர் பேரவையைத் ஸ்தாபிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வித்துறைசார் பங்காளர்களுடனான நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டமூலத்தின் பிரகாரம், தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு
ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.