தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகரவை 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  வாக்குமூலத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இன்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கலாநிதி குணசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை (08) கைதுசெய்யப்பட்டதுடன், அவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின்  குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வினர் வைத்தியர் குணசேகரனை கைது செய்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply