பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டவர்களுக்கு 427500ரூபாய் அபராதம்!

கடந்த வாரம் பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டமை மற்றும் அஜாக்கிரதையாக சவாரி செய்தமைக்காக கைது செய்யப்பட்ட 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை,   வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply