2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான வினாத்தாள்கள் தொடர்பான முறைகேடுகள் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தினார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமஜயந்த, க.பொ.த சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தயாரிக்கும் குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் நேர்மையை உறுதி செய்வதற்காகக் குழு மதிப்பெண் திட்டத்தை சரியான முறையில் மாற்றியமைக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆங்கில வினாத்தாள் முறைகேடுகளால் பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
