கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!

மஹஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (13) பிற்பகல் பதிவாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர் சமகிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 23 வயதுடைய இரு சகோதரர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply