பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சப்ரகமுவ மாகாண அரச வைத்தியசாலைகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு!

சப்ரகமுவ மாகாணம் முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (14) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நான்கு மணித்தியாலங்களுக்கு கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைக்காமையால் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மே 9 முதல் மாகாண மட்டத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.

தமது குறைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply