இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுகிறது! பாலித பெரேரா தெரிவிப்பு!

இலங்கை மின்சார சபையின்  சுமார் 130 பொறியியலாளர்கள் அண்மைக்காலமாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.

இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை மின்சார சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்  பாலித பெரேரா, தற்போது மொத்தமாக பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

130 பேர் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களுக்குள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தாததால், 330 பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது, எனவும் தெரிவித்தார்.

இதேவேளை,ஏ.எஸ்.மின் ஆலையை வாங்க முன்வந்தபோது, ​​அதை செய்யாமல் அவசரகால கொள்முதல் ஊடாக பலகோடி ரூபாய் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply