ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு!

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரைசியுடன்  மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply