வழமைப்போல் பாடசாலைகள் திறக்கப்படும்! கல்வி அமைச்சு தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (மே 22) மூடப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (22) திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக அது மேலும் தெரிவிக்கிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply