காலி, இமதுவ பகுதியில் உள்ள கடையொன்றில் ஆயுதங்களுடன் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கியுடன் மேலும் மூன்று துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் காரில் வந்து ஆயுதங்களுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பக்கத்து கடை ஒன்றின் உரிமையாளரும் உள்ளடங்குவதாகவும், குறித்த கடை உரிமையாளரே முழு கொள்ளைக்கும் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வக்வெவ, எம்பிலிப்பிட்டிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடையில் ஆயுதம் ஏந்தியபடி கொள்ளையடிக்கும் காட்சிகள் அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளன.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் வத்தளை கந்தானை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மித்தெனிய ஆகிய இடங்களில் துப்பாக்கி முனையில் கடைகளை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல திருடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
