பொரளை தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இன்று (21) காலை மரம் முறிந்து வீழ்ந்ததாகவும், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனர்த்த சம்பவத்தில் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் மரத்தை அகற்றி வீதியூடான போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
