பொய்யான தகவல்களைத் தயாரித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
