புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க தீர்மானம்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதில், புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (21) மூடப்பட்டிருந்த போதிலும் நாளை (22) வழமை போன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வானிலை நிலைமைகளைப் பொறுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply