எதிர்வரும் 26ஆம் திகதிவரை மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் நிபுணர் தெரிவிப்பு!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டிற்கு மேல் நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரும் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்திற்குப் பொறுப்பான வளிமண்டலவியல் நிபுணர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply