கொழும்பு கல்கிசை கடற்கரை பகுதியில் ‘ஹீல்ஸ்’ எனப்படும் அரிய வகை மீன் ஒன்று கடந்த 20 ஆம் திகதி இறந்து கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைதூர கடல் பகுதியில் அரிதாகவே காணப்படும் இந்த வகை உயிரினத்திற்கு ‘கல்குலாஸ்’ என்ற பெயரும் பயன்படுத்தப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விலங்கு இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியிலேயே வாழ்வதுடன் அவை கரைக்கு வருவதில்லை எனவும் தெரிவித்துள்ள மீனவர்கள், மற்ற மீன்களின் உடல் நிறத்திலிருந்து மாறுபட்ட புள்ளிகளையுடைய தோலைக் கொண்ட இந்த மீன்கள் உணவாக உட்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மீனானது ஆழ்கடலில் உள்ள பாறைகளை சுற்றிவர மீனவர்களால் விரிக்கப்பட்ட வலையில் சிக்கியிருக்கலாம் அல்லது இந்த மீன் ஆழ்கடலின் நீரோட்டத்துடன் கரைக்கு மிதந்து வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
