இதுவரை இல்லாத வகையில் பிரேசிலில் டெங்குப் பாதிப்பு!

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்குப் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலில் 51 இலட்சத்து 45,295 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரென்றும், இதுவரை 2,899 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரேசிலின் சில அண்டை நாடுகளிலும் அது பரவத் தொடங்கியுள்ளது.

காலநிலை மாற்றம் போன்ற காரணிகளே டெங்குப் பரவலின் அதிகரிப்புக்குக் காரணம் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply