வடக்கு ரயில் பாதையின் புனரமைப்பு ஆகஸ்ட் மாதத்தில் பூர்த்தியடையும்!

வடக்கு புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பொசன் போயாவிற்கு முன்னர் நிறைவடைவது சாத்தியமில்லை என நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வடக்கு ரயில் பாதையின் அபிவிருத்தியை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய முடியும் என விளக்கமளித்தார்.

இதேவேளை, பொசன் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட பஸ் சேவையொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொசன் போயா தினத்திலும் அதற்கு முந்தய நாளிலும் இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட பஸ் சேவை அட்டவணை தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பஸ் சேவையாளர்களுடனும் அதற்கான  விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply