ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்ட கால எல்லைக்குள் கட்டாயமாக நடத்தியாக வேண்டும்! ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ அதனைத் தடுக்க முடியாது!”, என சுதந்திர மக்கள் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாடாளுமன்றத் தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? முதலில் நடைபெறும் என மக்கள் ஆர்வமாக உள்ளனர். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலை குறித்த நேரத்திற்குள் நடத்தியாக வேண்டும்!”, எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் – “ஜனாதிபதித் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பயன்படுத்த முடியாது என சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தினாலும் கூட்டு நிதியத்திலிருந்து தனித் தொகையை ஒதுக்கியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நீடிப்பதற்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை. அதனைச் சட்ட ரீதியாகச் செய்ய முடியாது, எனவும் ஜி.எல். பீரிஸ் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
