நாய்களுக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசி பற்றாக்குறையால் வெறிநாய் நோய் (நீர் வெறுப்பு) தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும், ரேபிஸ் நோயைத் தடுக்கவும், கால்நடைத் துறைகளால் நாய்களுக்கு இந்தத் தடுப்பூசி ஆண்டுக்கு ஒருமுறை போடப்படுகிறது. அதற்காக கால்நடை துறையினர் கட்டணம் வசூலித்தாலும், தெருநாய்களுக்கு கூட கால்நடைதுறை மூலம் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது இந்த தடுப்பூசி மருந்தை கால்நடை துறைகளுக்கு அரசு முறையாக வழங்காததால் ஒரு தீவிரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் இந்த தடுப்பூசி விற்பனைக்கு உள்ளது, ஆனால் விலை அதிகம். இதன் காரணமாக நாய்களுக்கு தடுப்பூசி போட எவரும் அதிக விலை கொடுப்பதில்லை. இதனால்தான் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படாததால் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் என சுகாதார வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
கொடிய ரேபிஸ் நோய் நாட்டில் பரவாமல் தடுக்க, இந்த தடுப்பூசியை உடனடியாக நாட்டிற்கு தருவிக்க வேண்டும் என கால்நடை மருத்துவத்துறையினர் அரசுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
