முதல் தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள்

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் இலங்கை வரலாற்றில் நடைபெறாத விடயங்களை நடாத்த வைப்பதாக உள்ளது.

இத்தனை காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் மரப்பலகையினாலான வாக்குபெட்டிகளே பயன்படுத்தப்பட்டது. தேர்தல்கள் வரலாற்றில் முதற்தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளது.

நன்கு கனதியான கார்ப்போர்ட் மட்டைகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir