வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது

தேர்தல் விதியை மீறி இடம்பெற்ற வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் நேற்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

கடந்த வாரம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்த நடவடிக்கையை முன்னெடுத்தார். தேர்தல் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றபோதிலும், வாக்குகளை கவர்வதற்காக இத்தகைய செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்தே இந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இந்தப் பணியை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது அங்கு திரண்ட ஈ.பி.டி.பியினர் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முயற்சித்தனர். எனினும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் கூறிய பின்னர் அவர்கள் மக்கள் கலைந்து சென்றனர் .

You May Also Like

About the Author: kalaikkathir