காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதி வழங்கும் பொருட்டு இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குபா விளையாட்டு கழகத்தின் தலைவர் சுஜாத் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி வைத்திய அதிகாரி மற்றும் அதன் தாதியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காத்தான்குடி குபா விளையாட்டு கழகத்தின் செயலாளர் சுஜா உட்பட அதன் உறுப்பினர்களும், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
