தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சே ராஜரத்தினத்திற்கு 6 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, இம்மாத நடுப்பகுதியில் ஓய்வுபெறவிருந்த சட்டமா அதிபர், இந்த வருட இறுதி வரை பதவியில் நீடிக்கக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளார். தற்போதைய பிரதம நீதியரசர் ஜெயந்த ஜயசூரியவும் ஓய்வு பெறவுள்ள நிலையில் சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு மிகவும் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகின்றது.
தற்போதைய பிரதம நீதியரசர் சேவை நீடிப்பு இன்றி ஓய்வு பெற்றால், சேவை நீடிப்பு பெறுகின்ற சஞ்சேஜ் ராஜரத்தினம் தலைமை நீதிபதியாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கருதப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில், நீதித்துறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவிருக்கும் நியமனங்கள் தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
