வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவும் அபாயம்! மக்களுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான காலங்களில் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகம் என குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளதுடன்
அவை முக்கியமாக அசுத்தமான நீர் மற்றும் உணவு காரணமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் வலியுறுத்தினார்.

பெரும்பாலும் இது ஒரு வைரஸ் காய்ச்சல் எனவும் வாந்தி, அஜீரணம், வயிற்று வலி ஆகியவற்றுடன் காய்ச்சலும் வயிற்றுப்போக்குடன் கூடுதலாக இரத்த மலம் இருந்தாலும் இது வயிற்றுப்போக்காக இருக்கலாம் எனவும் கூடுதலாக, இன்புளுவன்சா இன்றும் பரவுகிறது எனவே, ஒரு குடும்பத்தில் இருமல், சளி, காய்ச்சல் வேகமாகப் பரவினால், அது காய்ச்சலாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகளை முறையாகவும், முடிந்தவரை உடனடியாகவும் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குடன் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் ஏனைய அசுத்தமான நீர் ஆதாரங்களை சுத்தம் செய்யும் போது கிருமிநாசினிகளை பயன்படுத்துவது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply