களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பியகம, கொலன்னாவை, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.