சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாய அமைச்சினால் சிரதமானப் பணி முன்னெடுப்பு!

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் கோண்டாவில் சந்தி முதல் திருநெல்வேலி சந்தி வரை இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவரது ஆரம்ப உரையோடு முன்னெடுக்கப்பட்ட சிரதமானப் பணியில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு உத்தியோகத்தர்கள் பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி முதல் திருநெல்வேலி சந்தி வரையான பிரதேசத்தில் உக்காத கழிவுப் பொருட்களை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்.

இதேவேளை, குறித்த வேலைத்திட்டத்தில் நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் வாகன வசதியினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply