நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ரயில்வேயின் லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
லோகோமோட்டிவ் சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு தாமதம் மற்றும் பல பிரச்சினைகள் காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை அலுவலக புகையிரதங்கள் குறைந்தளவிலான பாதிப்பை சந்தித்தாலும், இன்று மாலை திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் இரத்துச் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 84 இன்ஜின் சாரதிகள் மாத்திரமே தமது பதவி உயர்வு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் வேலைநிறுத்தம் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் யூனியனால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தொழிற்சங்கத்தின் செயலாளரின் முடிவின் அடிப்படையில் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார்.
