இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (07) பொதுக் கடன் முகாமைத்துவ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவர் இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன் நிதி இராஜாங்க அமைச்சர், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கும் அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கும் உத்தரவாதங்களை வழங்குதல், கடன் வழங்குதல், சப்ளையர்களின் கடன் மற்றும் நிதி குத்தகை உடன்படிக்கைகளுக்குள் நுழைதல் ஆகியவற்றை இது செயல்படுத்தும், எனவும் தெரிவித்துள்ளார்.
