இலங்கை ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லோகோமோட்டிவ் சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு தாமதம் மற்றும் பல பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை ரயில்வேயின் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் வியாழக்கிழமை (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த தொழிற்சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், புகையிரத திணைக்களத்தின் நிர்வாக அதிகாரிகள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து தீர்வுகளையும் திணைக்களம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
