எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவின் படி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கம்மன்பில அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகளின்படி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தையே பெறுவாராயின், ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்ற போதிலும், கட்சி அலுவலகங்களை திறந்தாலும், மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினாலும் குறித்த சர்வஜன வாக்கெடுப்பில் மூன்றாவது இடத்திற்கு வந்தால், அவர் நிச்சயமாக போட்டியிலிருந்து விலகுவார் எனவும், யாரேனும் இன்னொரு தரப்புடன் கூட்டு சேர்ந்து போட்டியிலிட்டால் மாத்திரமே அவர் கிட்டத்தட்ட 15 வீதம் முதல் 20 வீதம் வரையிலான வாக்குகளையாவது அவர் பெற முடியும், இல்லையேல் ‘அம்போ’ தான் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
