தேர்தல்களை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி உத்வேகத்தோடு ஆரம்பம்!

எதிர்வரும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது வெற்றியைகக் கொண்டாடுவோரின் தேவை கருதி 50 வீதத்துக்கும் அதிகமான பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசுகளை விநியோகிக்கும் நோக்கில், தமது உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், பட்டாசு மற்றும் இதர வெடிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், இவ்வாறு உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால், வேட்பாளர்களின் கூட்டங்கள், வேட்பாளர்களை வரவேற்பது, தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் பின்னர் வெற்றிக் கொண்டாட்டம் ஆகியனவற்றிற்காக பட்டாசுகளுக்கு அதிக கிராக்கி ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply