அனைத்து பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்களின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தின் மூலம், டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சேவைக் காலம் முடிவடையவுள்ள முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து பாதுகாப்புத் தளபதிகளின் பதவிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலகுவாகப் பேண முடியும் என்பதற்காகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
