பல்கலைக்கழக அனுமதி கையேட்டை இணையத்தில் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்!

மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முறை பல்கலைக்கழக அனுமதி கையேட்டை இணையத்தில் மாத்திரம் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விசாரா ஊழியர்களின் தாக்கம் காரணமாக இம்முறை மாணவர் கையேட்டை அச்சடித்து விநியோகிக்க முடியாதுள்ளது என தெரிவித்த உப தலைவர் கல்வி உரிமை பற்றி தெளிவாக அறிந்துள்ள எந்தவொரு மாணவரும் அச்சடிக்கப்பட்ட மாணவர் கையேட்டைக் கேட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை குற்றம் சுமத்தமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முதலாம் ஆண்டிலிருந்து கல்விச் செயற்பாடுகள் ஒன்லைன் முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், மாணவர்களின் கையேட்டை இணையத்திலிருந்து பெறுவதில் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் மானியங்கள் ஆணைக்குழு அல்லது தன்னிடம் தெரிவிக்கும்படி பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply